கனடாவில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பால், வெண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி போன்ற உணவுப்பொருகளின் விலைகள் முன்னரை விட தொடர்ந்து அதிரித்துக்கொண்டே வருகின்றன.
தற்போது பால், இரண்டு லிற்றர் கார்ட்டன் விலை 5.35 டொலர்களாகவும், வெண்ணெய் 454 கிராம் பேக்கின் விலை 5.64 டொலர்களாகவும் உள்ளது.
இந்நிலையில், கனடாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என 2025ஆம் ஆண்டுக்கான கனடா உணவு விலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
அந்தவகையில், உணவு பொருட்களின் விலைகள் 3 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு சராசரி கனேடியக் குடும்பத்தின் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவு, இந்த ஆண்டில் சுமார் 800 டொலர்கள் வரை எட்டவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக அணுகுமுறை மற்றும் வரிகளும் கனடாவில் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் என, அந்நாட்டு பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.