சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த சூரரைப்போற்று படக்குழு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது. இப்படத்திற்காக சூர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வெளியான இரண்டே நாட்களில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.