‘‘அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண்ணின் கதை இது. அவர், விடுமுறையை கழிப்பதற்கு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார். அப்போது அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை’’ என்கிறார் படத்தின் டைரக்டர் ஸ்ரீஜித் விஜயன்.
‘‘படத்தில் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக சன்னிலியோன் கடுமையான பயிற்சிகள் எடுத்து நடித்தார். படப்பிடிப்பு மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரும். படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது’’ என்றும் கூறினார் டைரக்டர் ஸ்ரீஜித் விஜயன். இது தொடர்பாக சன்னி லியோன் கூறியதாவது:-
‘‘இந்த படத்தில் எனக்கு சவாலான வேடம். இதுபோன்ற சவாலான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். படப்பிடிப்பின்போது பல்வேறு மனிதர்களையும், மொழிகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகான இடங்களை பார்க்க முடிந்தது.
நான் நடித்த மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. சண்டை காட்சிகளில் நடித்தபோது, ஸ்டண்ட் நடிகர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.’’ இவ்வாறு அவர் கூறினார்.