தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கும் சமந்தாவுக்கு அவரது தீவிர ரசிகர் ஒரு கோயில் கட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் சமந்தாவின் சிலையை வைத்து அதற்கு தினமும் பூஜை செய்து வருகிறார்.
கோவில் வாசலில் சமந்தா கோவில் எனும் பெயரையும் சூட்டியுள்ளார்.
தினமும் இக் கோயிலில் சமந்தாவுக்கு பூஜை நடத்தப்படுவதோடு ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகைகள் குஷ்பூ, ஹன்சிகா, நமீதாவுக்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டியிருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் கோயில் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.