‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் இரசிகர்களிடத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் வெற்றி மீண்டும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
‘வெப்’, ‘7 ஜி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் வெற்றி, அக்ஷிதா , பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி , சாந்தினி தமிழரசன், ‘ஜென்சன் ‘திவாகர் , கல்கி, கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே. வி. கிரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜான் ரொபின்ஸ் இசையமைக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மகேந்தர் ஜெயின் மற்றும் இயக்குநர் ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”நடிகர் வெற்றி மீண்டும் பொலிஸ் சீருடை அணிந்து அதிகாரியாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறுகிறது” என்றார்.