செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான சுண்டைக்காய் பச்சடி!

சுவையான சுண்டைக்காய் பச்சடி!

1 minutes read

தேவையானவை:
சுண்டைக்காய் – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
வெங்காயம்,
தக்காளி – தலா ஒன்று,
பச்சை மிளகாய் – 4,
புளி – கோலி அளவு,
கடுகு,
உளுத்தம்பருப்பு,
சோம்பு – தலா 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
பெருங்காயத்தூள் – தலா 1 சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:
சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சித் தொல்லையை நீக்கும் அருமருந்து இது.

நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More