தலப்பா கட்டு பிரியாணி ,பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆகும்.அதிலும் தலப்பா கட்டு பிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று ஆகும் . அத்தகைய பிரியாணியை வீட்டில் செய்வது எப்படி என்று பாப்போம் .
தேவையான பொருட்கள்
நெய் -2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ற
பாசுமதி அரிசி -2கப்
வெங்காயம் பெரியது 1(நறுக்கியது)
பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் 1டீஸ்பூன் கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி
புதினா 1 கைப்பிடி
கெட்டியான தேங்காய்ப்பால் 1கப்
தண்ணீர் 2 கப் உப்பு தேவைக்கேற்ப
பிரியாணி மசாலாபொடிக்கு தேவையானது
சோம்பு 2 டேபிள்ஸ்பூன் , பட்டை 3 ,ஏலக்காய் 6 ,அன்னாசிபூ 2, கராம்பு 6
சிக்கன் உறவைக்கத் தேவையானவை
சிக்கன் 1kg
கெட்டியான புளிக்காத தயிர் 1கப்
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைகேற்ப
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவுக்கு பெரிய துண்டுகளாக வெடிக்க கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டியா சிக்கனை போட்டு கெட்டியான தயிர் மிளகாய்த்தூள் உப்பு,ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் உறவைத்துக் கொள்ள வேண்டும்
பின்னர் சோம்பு பட்டை ,ஏலக்காய், அன்னாசிப்பூ கராம்பு அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு பாசுமதிஅரிசியை கழுவி நீரில் 3 நிமிடம் உர வைத்துக் கொள்ள வேண்டும்
அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் உற்றி காய்ந்ததும் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின்பு இறைச்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும் .
அதன் பிறகு அதனுடன் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்பு உற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி,சிக்கனில் மசாலா சேரும் வரைபிராட்டி விட்டு 15 நிமிடம் குறைவான தீயில் வைக்க வேண்டும் .
தலப்பா கட்டு பிரியாணி தயார்