பூண்டில் இருக்கும் அல்லிசின், பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
பெரும்பாலான இந்திய உணவுகளுக்கு பூண்டு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது.இது உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளன என்று மருத்துவர் மூமல் ஆசிஃப் இன்ஸ்டாகிராமில் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட உணவியல் நிபுணர் கரிமா கோயல், பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, உண்மையில் இது ஒரு மருந்து என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார். இது புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவுக்கு எதிராக போராடும் சிறந்த நோய்-தடுப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. மேலும் அதன் ஆக்ஸிஜனேற்ற நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ராவும் பூண்டு ஒரு “அதிசய உணவு” என்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டார்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அல்லிசின் இருப்பதால். பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை கொண்டது, மேலும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற சில அறிவாற்றல் நோய்களைத் தடுக்க உதவும்.
சிலர் வறுத்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவார்கள். எவ்வாறாயினும், பூண்டை 2 நிமிடம் வறுப்பது கூட அதன் அனைத்து ஆரோக்கிய நன்மைகளையும் அழிக்கிறது என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
சமைத்தவுடன், பூண்டில் உள்ள அல்லிசின் கலவையானது பி மற்றும் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்களுடன் சேர்ந்து இழக்கப்படுகிறது, ஏனெனில் அவை அனைத்தும் வெப்பத்துக்கு உணர்திறன் கொண்டவை என்று மருத்துவர் கோயல் விளக்கினார். பூண்டின் ஆரோக்கிய நன்மைகளைத் தக்கவைக்க, மருத்துவர் ஆசிஃப் ஒரு சிறிய மாற்றத்தை பரிந்துரைத்தார்.
பூண்டை நசுக்கி அல்லது நறுக்கி, 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். இந்த நேரத்தில் அதிகபட்ச அல்லிசின் உருவாக்கப்பட்டு, சமைக்கும் போது அப்படியே இருக்கும். 10 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதை வதக்கலாம் அல்லது வறுக்கலாம். இது உங்கள் உணவுகளில் சேர்ந்துவிடும்.
இந்த சூப்பர் விதி மூலம் பூண்டின் எண்ணற்ற நன்மைகளை அனுபவிக்கவும்!
35