நெல்லிக்காயைப் பயன்படுத்தி ரசம் செய்யலாம் தெரியுமா? நெல்லிக்காய் கண்கள், முடி, தோல், இதயம் மற்றும் செரிமான அமைப்புக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது.
இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஆகவே நெல்லிக்காய் வைத்து எப்படி தினசரி சாப்பிடும் உணவில் ரசமாக சேர்த்துக்கொள்ளலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பேஸ்ட் – 1 கப்
மிளகு – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு
கடுகு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
இஞ்சி
தண்ணீர் – 2கப்
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் மிக்ஸியில் பூண்டு, சீரகப் பொடி, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் நெல்லிக்காய் பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொதித்தவுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் அருமையான நெல்லிக்காய் ரசம் தயார்.