தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி- 2 கிண்ணம்
வெங்காயம்- 2 பொடியாக நறுக்கியது
உப்பு தூள்- 3 தேக்கரண்டி
பிரிஞ்ஜி இலை- 1
பனீர்- 200 கிராம்
எண்ணெய்- அரை தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு- 1 தேக்கரண்டி
அரைக்க: பூண்டு- 6 பற்கள்
சோம்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 3
பட்டை- 1 துண்டு
மிளகு- அரை தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
சீரகம், தனியா- தலா 1 தேக்கரண்டி
வவங்கம்- 3
ஏலக்காய்- 2
செய்முறை
அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை அரைக்கவும். பனீரை பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதுவிட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, பிரிஞ்ஜி இலை போட்டு வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, பிரிஞ்ஜி இலை போட்டு வதக்கவும். பின்னர், பனீர், 4 கிண்ணம் தண்ணீர், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கொதி வந்ததும், அரிசியைச் சேர்க்கவும். அடுப்பின் மேல் வாணலியை வைத்து, சிறு தீயில் தம் முறைப்படி அரிசியை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.