ஐரோப்பாவில் உள்ள வீதிகளில் இலண்டனின் வீதிகள் மிகவும் நெரிசலானவை என கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரில் உள்ள சாரதிகள் 2024ஆம் ஆண்டில் 101 மணிநேரம் போக்குவரத்தில் நெரிசலில் செலவிட்டனர் என்றும் இது முந்தைய ஆண்டை விட 2% அதிகமாகும் என, போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான இன்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நெரிசலால் இலண்டனுக்கு ஏற்பட்ட மொத்த செலவு £3.85 பில்லியன் என மதிப்பிடப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு சராசரியாக £942 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் பாரிஸ் நகரமானது இரண்டாவது மிகவும் நெரிசலான வீதிகளை கொண்டிருந்தது என்றும், அங்கு ஒரு சாரதிக்கு 97 மணிநேரம் தாமதமாகிறது என்று தெரியவந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் டப்ளின் உள்ளதுடன், அங்கு 81 மணிநேரம் செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.