கவிதைகளை நீங்கள்
உங்கள் உணர்வால்
எழுதி வைத்து கொள்ள
அது உங்கள்
மனதால் பேசுகிறது.
என் மனமதை புரிகிறது.
ஒவ்வொரு முறையும்
படிக்கும் போது
வியப்பில் நான் மூழ்கிறேன்.
சிந்திப்பில் நீங்கள்
சிறகடித்து பறக்கும் போது
மகிழ்ந்து போகின்றேன்.
உங்களுக்குள்ளும் இப்படி
ஆழமான ஆளுமை
இருக்கிறது என்பது புரிகிறதா?
உண்மையைச் சொல்ல
நான் தேவையில்லை.
உங்கள் கவிதைகள் போதும்.
ஒவ்வொரு வரியும்
கடந்து போகும் போது
உணர்வின் வலியை தருகிறது.
பல வரிகளை நான்
படிக்கும் போது
எனக்குள் அழுது விடுகிறேன்.
சில சமயங்களில்
என்னை அறியாமலே
எனக்குள் சிரிப்பு வருகிறது.
ஆனந்தம் என்னை
ஆரத்தழுவி கொள்வதால்
மனதில் மகிழ்ச்சி மலர்கிறது.
உணர்வின் உன்னதம்
உள்ளார்ந்த கவி வரிகளில்
ஊறித் திளைத்துள்ளது.
வாழ்ந்து முடிக்கும் வரை
வாழத் துடிக்கும்
மனதுக்கு கவிதைகள் போதும்.
நதுநசி