புதிய போப் ஆண்டவர் யார் என்பதை முடிவு செய்ய பேராயர்கள், வத்திக்கானில் ஒன்றுகூடத் தொடங்கிவிட்டனர். 70 நாடுகளைச் சேர்ந்த 131 பேராயர்கள் சந்திக்கின்றனர்.
இன்று தொடங்கும் இக்கூட்டம், ஒரு மணி நேரத்தில் முடியலாம் அல்லது சில நாள்கள், சில மாதங்கள் வரை கூட நடக்கலாம்.
போப் ஆண்டவர் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தமது 88ஆவது வயதில் மறைந்தார். இந்நிலையில், புதியவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வத்திக்கான் ஈடுபட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் பணி மிகவும் இரகசியம் ஆகும். பேராயர்களோடு அவர்களுக்கு உதவியாகச் செயல்படும் அதிகாரிகளும், ஊழியர்களும் இரகசியத்தைக் காக்க வேண்டும்.
இன்று (06) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணி முதல் தொலைதொடர்புச் சேவை அனைத்தும் துண்டிக்கப்படும் என்று வத்திகன் அறிவித்தது. புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே சேவை வழக்க நிலைக்குத் திரும்பும்.தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும் இடத்துக்குள் பேராயார்கள் கைத்தொலைப்பேசியைக் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால் வெள்ளைப் புகை வெளியேற்றப்படும். இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் கரும்புகை வெளியேற்றப்படும்.
உலகெங்கும் உள்ள 80 வயதுக்கும் குறைவான தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவர்.
புதிய போப், பேராயர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெற்றவராக இருப்பார்.