பயங்கரவாத சதித்திட்டத்தின் சந்தேகத்திற்குரிய இலக்காக இலண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் இருந்ததாக பிபிசி அறிக்கையிட்டுள்ளது.
பயங்கரவாதச் செயலுக்குத் திட்டமிட்டதாக ஈரானிய பிரஜைகள் ஐவர் சந்தேகத்தின் பேரில் இலண்டனில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் தாக்குதல் இலக்காக இஸ்ரேலிய தூதரகம் இருந்ததாக பிபிசி அறிக்கையிட்டுள்ளது.
அத்துடன், கென்சிங்டனில் உள்ள தூதரகம் சந்தேகத்திற்குரிய இலக்காக இருந்ததாக பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என த டைம்ஸ் முன்னதாக அறிக்கையிட்டுள்ளது.
எனினும், குறித்த அறிக்கை துல்லியமானது என பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறான விடயங்களை ஈரான் முற்றிலும் நிராகரிப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி, சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.