9

இலை உதிர்
காலம் ஒன்றில்
வர்ணங்களிளான
வாழ்வின் நினைவுகளோடு
கிளையில் இருந்து
விடைபெறுகின்றன
முதுமைகள்
கடமையை முடித்து
ஒரு காலத்தின்
இடைவெளியை கடந்து
கரை ஒதுங்குகின்றன
அந்த நதியோரமாய்
மீண்டும் ஒரு
கோடை காலத்தில்
பூவோடும் கனியோடும்
உன் மீதான காதலோடும்
உயிர்த்து எழுவேன்
என்ற நம்பிக்கையோடு
சிரித்தபடி விழுகின்றன
சருகுகள்.
பா.உதயன்