தேசங்கள் மிளிரும் நேரம்
கண்வைத்தவன் எவனோ
காகங்களும் வட்டமிடுகிறது
ஆங்காங்கே
தெருக்கள் முழுவதும்
இடைவிடாத சப்தங்கள்
என்னினங்களும் கண்டிராத கேட்டிராத
புதியதொரு பறவையினங்கள்
கூவியபடி வானில் படமெடுத்தபடி சுற்றியது
தெருமுனைகலெங்கும் பதட்டமடைந்த
புறாக்கள்
விழிகள் பிதுங்கிய குருவிகள்
சற்று விரிசல் விழுந்த முகில்களுக்கிடையே
வானை கிழித்து பறந்த பருந்துகள்
குமுறிய சத்தத்தின் நடுவே
குளறிய குருவிகள் பதுங்குகுழிகளை தேடி
தன் குஞ்சுகளுடன் பதுங்கியது
இயற்கையின் மாறுபட்ட ஒலியின் விசித்திரத்தை
அறியாத குஞ்சுகள் வானில் வேட்டையாட
துரத்திடும் பருந்துகளின் கூரிய சொண்டுக்கு
இரையாவதை அறிந்திருக்கவில்லை
மேலும் கீழும் பறந்திட்ட பருந்துகளின்
கண்களில் குருவிகளின் கூடுகள் சிக்கவில்லை
போலும்
வானில் குமுறிய சப்தத்தின் பதட்டத்தில்
முகில்களின் முகங்களும் கறுத்தது
வேற்றுநாட்டில் உலாவிய பறவைகளும்
பருந்துகளுக்கு வேட்டையாடிட
இரைகளை காட்டிக்கொடுத்தது
வீறுகொண்டு விசும்பளந்த பருந்துகள்
நிலமகள் தாவிய குருவிகளை கூண்டோடு
கவ்விச்சென்றது
அலறிய குரல்களின் அவயங்கள்
தூண்டற சிதைத்தழித்தது
தணியாத பசியோடு பறந்த
கருடன் மீண்டும் வருவான்
மிஞ்சிய குஞ்சுகளும்
கூடழிந்து இடமறிற்று.
கேசுதன்