செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சூழ் கொண்ட இரவு | ரவிசந்திரன் கஜன்

சூழ் கொண்ட இரவு | ரவிசந்திரன் கஜன்

0 minutes read

 

இருளப்பிய சாலையொன்றின்
இருக்கையில் அமர்ந்தப்படி,
நட்சத்திரங்கள் உதிர்ந்த
வானத்தின் வனப்பை
நெடிய மவுனத்துடன்,
நெஞ்சறையை பக்குவப்படுத்தி
இரசித்துக்கொண்டு இருக்கிறேன்!
புரிதல் சாத்தியமற்ற
எனக்குள்,
ஸ்பரிசத்திற்கான அவாக்கள்
நிரம்பி கிடக்கிறது.
நிகழ்கணத்தின் நிசப்தம்
என்னவோ,
ஊதிப் பெருத்த – என்
தனிமையின் இரவை
ப்ரியப்படுத்துகிறது…

ரவிசந்திரன் கஜன்
பேராதனைப் பல்கலைக்கழகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More