0

சின்னச் சிறகடித்து
நெஞ்சுக்குள் சுகம் விளைத்து
என்ன அழகாய் பாடுவாய்..
அதிகாலை நீ வர முன்
உன் இசைக்காய் காத்திருப்பேன்..
இன்று உன் பாட்டில் ஏன் சோகம்
புரிய வில்லை …
நீயோ உன் பாட்டில்
தேன் குடித்து முடிய
பாடிவிட்டுப்போய்விட்டாய்
நானோ தனித்திருந்தேன்
இந்த தனிமையிலே
நெஞ்சில் ஒரு வெளிச்சம்
என்றும் போலவே நீ பாடினாய்
சோகம் உன் பாட்டிலில்லை
என் நெஞ்சிலேதான்
உண்மை தெளிந்து கொண்டேன்
நாளை அதிகாலை
சுமையின்றி வந்திடுவேன்
உன் பாட்டின் சுகம் உணர்வேன்.
சண்முகபாரதி