செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை…

பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை…

1 minutes read

முன்பொரு காலத்தில் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோயாக கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான்!

42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதம் ஆண்டு ஒன்றுக்கு 2% அதிகரித்து வருகிறது எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இதுகுறித்தி ஹார்ட்வேர்ட் பல்கலை கழக இணை பேராசிரியர் ரான் பிளாங்க்ஸ்டீன் தெரிவிக்கையில்…

தற்போதைய காலகட்டத்தில் 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதத்தை காட்டிலும் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளோர் விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்கொல்லி நோயாக கருதப்படும் மாரடைப்பு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வது எப்படி?…

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சமமாய் உட்கொள்வதால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவை சமமாய் உட்கொள்ள வேண்டும் என்றால் தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவு சாப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் சீராக இயங்குவதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களையும் நமக்கு அளிக்கும் என கூறப்படுகிறது.

2010 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், மிக குறைந்த அளவு பழங்களை உண்டதால் 1.8 மில்லியன் மக்கள் இருதய நோய் காரணமாக இறக்க நேர்ந்திருக்கிறது. காய்கறிகளை உட்கொள்ளும் அளவு குறைந்ததால் ஒரு மில்லியன் மக்கள் இறந்திருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மூலம் தென்னாசியா, கிழக்காசியா மற்றும் ஆஃப்ரிகா போன்ற நாடுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, குறிப்பிட்ட இந்த நாடுகளில் இறப்பின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழங்கள் நிறைய சாப்பிடுவதால் அதிலிருந்து உடலுக்கு வைட்டமின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. இதன் காரணமாக, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறையும்.

இந்த ஆய்வின் தகவல்படி பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். குறிப்பாக ஆண்கள் தினசரி பழங்கள் சாப்பிடலாம். இதனால் இருதய நோய் வராமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது.

நன்றி-medicaltips

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More