சென்னையில் நேற்று(06) இடம்பெற்ற அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றியிருத்த போது இந்திய பிரதமர் மோடி இவ்விடயத்தை தெரிவித்தார்.
இந்தியாவிலோ உலகின் எந்தப் பகுதியிலோ தமிழ் உறவுகள் கஷ்டங்களை எதிர் நோக்கினால், அவர்களுக்காக குரல்கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணில் உள்ள இந்தியத் தமிழர்களுக்கு 14000 வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுப்பதையிட்டு அனைவரும் பெருமையடைய வேண்டும் என இந்திய பிரதமர் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் 3000 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி சுட்டிக்காட்டினார்.