வட ஆபிரிக்க நாடான டியூனிசியாவில் 11 சிசுக்கள் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டெரௌப் செரிப் விலகியுள்ளார்.
டியூனிசிய தலைநகர் டியூனிஸில் உள்ள வைத்தியசாலையொன்றில் 11 சிசுக்கள், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பதவியை ஏற்று நான்கே மாதங்களான அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டேரௌப் செரிப், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே, மருத்துவ பாதுகாப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகள், சிசுக்களின் உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.