இன்றும் நாளையும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டார்.
சமூக நலன் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அரச அலுவலங்களினால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு தேயிலைதோட்ட உரிமையாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏனைய சிறு கைதொழில் துறையை சார்ந்தவர்கள் மற்றும் கட்டட நிர்மாணதுறைக்கான சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கும் 5 ஆயிரம் ரூபா நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சுட்டிகாட்டியுள்ளார்.