இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இலத்திரனியல் முறையிலான பிறப்பு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலத்திரனியல் முறையிலான காணி உறுதிப்பத்திரம் வெளியிடும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிறப்பு சான்றிதழில் தாய் மற்றும் தந்தை திருமணம் செய்துள்ளார்களா என்ற கேள்வியும், இனம் தொடர்பான கேள்வியும் நீக்கப்படவுள்ளதாக பதிவாளர் ஜெனரல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய் தந்தை திருமணமானவர்களா என்ற காரணத்தினால் பல பிள்ளைகள் சிக்கலுக்கு முகம் கொடுப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான சமூக சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கு புதிய பிறப்பு சான்றிதழில் இலங்கையர் என பதிவிட்டு வெளியிடுவதாக பதிவாளர் என்.சீ.வித்தானகே தெரிவித்துள்ளார்.
புதிய டிஜிட்டல் சான்றிதழ் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.