சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் இறுதி இங்கிலாந்து விமானம் சனிக்கிழமை இரவு புறப்பட்டது.
ஆயுதப் படைகளின் போரால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து பிரிட்டனின் பிரஜைகளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை என்று இங்கிலாந்து அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு தலைநகர் கார்ட்டூமுக்கு வடக்கே உள்ள வாடி சயீத்னா விமானநிலையத்தில் இருந்து கடைசி விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும், இங்கிலாந்து இனி விமானநிலையத்தில் இருந்து வெளியேற்றும் விமானங்களை இயக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சனிக்கிழமை இரவு, 21 விமானங்களில் 1,888 பேர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர் பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.