பஞ்சாங்கம் ஐந்து கூறுகளை கொண்டது என்று பார்த்தோம் அதில் ஒன்றுதான் கரணம் நாம் முறையே வாரம் , திதி போன்றவற்றை பார்த்து விட்டோம் இப்போது கரணத்தை பற்றி விளக்கமாக பாப்போம்.
திதியில் பாதி கரணம் சூரிய சந்திரன் ஒருவருக்கு ஒருவர் விலகும் சேரும் இடைவெளி 6 பாகை இருக்கும் கரணம் போது காரணங்கள் 60 உண்டு அதில் 11 வகை காரணங்கள் வழக்கில் உள்ளது .
அதாவது ஒரு திதியில் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு காரணமாக 12 பகைக்கு 2 காரணங்கள் வரும்.
7 நிலையான கரணங்கள் மாதத்தில் 8முறை வரும் 4 நகரும் காரணங்கள் ,மாதத்தில் ஒரு முறை மாத்திரம் வரும்.
பிறந்த நேரத்தை கொண்டு ஒருவரின் கரணம்த்தை அறியலாம் பவம் , பாலவம், கெளலவம் , தைத்துளை, கரசை சுப கரணம் வனிஸை பத்திரை, சகுனி , சதுஷ்பாதம் , நாகவம், கிமதகுகனம் அஸ்வ கரணம் ஆகும் .
பவம்-சிங்கம், பாலவம்-புலி, கெளவம்-பன்றி , தைத்துளை -கழுத்தை
கரசை -யானை , வரிசை -எருது ,பத்தரை -கோழி , சகுனி -காகம் , சதுஷ்பாதம் -நாய் , நாகவம் -பாம்பு, கிம்ஸ்துக்னம் -புழு
இக்கரணங்களுக்குரிய விலங்குகளின் குணங்களை மனிதன் கொண்டவனாக இருக்கின்றான்.