கிளி கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் உற்சவ விழா எதிர்வரும் புதன்கிழமை 05.04.2023 அன்று நடைபெற இருக்கின்றது.
இந்த நிலையில் 29.03.2023 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி பிரம்பு கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்று ஆலய தல புராணம் ஓத ஆரம்பிக்கப்பட்டு பறை வாத்தியம் முழங்க பண்ட வண்டில்கள் மீசாலை புத்தூர் சந்தி பண்ட மரவடிக்கு கொண்டு செல்லப்படும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து வருகின்ற செவ்வாய்கிழமை 04.04.2023 அன்று மீண்டும் அங்கிருந்து பண்ட வண்டில்கள் உரிய முறைப்படி கொண்டு வரப்பட்டு பொங்கல் தினத்தன்று புளியம்பொக்கனையை வந்தடையும்.
ஒளிப்படங்கள் – வே.நயனீசன்