1000 ஆண்டுகளுக்கு முந்தைய செப்பேடுகள் தமிழகத்தின் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் தெய்வத் திருமேனிகள் மற்றும் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 ஐம்பொன் சிலைகள் 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 24 திகதி நடைபெறவிருக்கும் சீர்காழிப் பெருஞ்சாந்திப் பெருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணிக்காக அகழி வெட்டும் போதே இவைகள் வெளிப்பட்டன.
சைவ மரபின் தலைமைக் குரவரான சம்பந்தப் பெருமான் அவதரித்தருளிய சீர்காழியில் தேவாரப் பாடல்கள் எழுதப்பட்ட 400க்கும் மேற்பட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றிலேயே இத்தகைய அற்புத நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை என்று சொல்கிறார்கள்.தேவாரத் திருமுறைகளை செப்பேடுகளில் எழுதி வைத்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆனால் இப்போதுதான் முதன்முறையாக தேவாரத் திருப்பாடல்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.இவற்றில் இதுவரை கிடைக்காத தேவாரப் பாடல்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும்.
புதிய பாடல்கள் கிடைப்பின் அவை நம் பன்னிரு திருமுறை அச்சுப் பதிப்பில் சேர்க்கப்பட்டு பரப்பப்பட வேண்டும்
.