அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை 24, 2020ல் துவங்கி ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் சுமார் 206 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 11,091 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதில் சுமார் 33 விதமான விளையாட்டுக்களில் 339 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒலிம்பிக் டார்ச்சை டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த டார்ச், டோக்கியோவின் புகழ்பெற்ற, செர்ரி பிளாசம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறத்தில் சுமார் 71 செ.மீ. நீளமும் 2 கிலோ எடையும் கொண்டு இந்த டார்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலுமினிய கூடாரத்தில் பயனப்டுத்தப்பட்ட அலுமினியமும் அவர்களின் நினைவாக இந்த டார்ச்சில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் டார்ச் தனது பயணத்தை புகுசியாவில் இருந்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் மார்ச் 26, 2020ல் துவங்கி, ஜப்பான் தலைநகருக்கு ஜூலை 10ல் மீண்டும் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.