செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல் | தீபச்செல்வன்

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல் | தீபச்செல்வன்

4 minutes read

பண்டிகைகள் வாழ்வின் கொண்டாட்டத்திற்குரியவை மாத்திரமல்ல. அதன் ஊடாக வாழ்வினதும் பண்பாட்டினதும் ஆகச் சிறந்த மாண்புகள் வெளிப்பட்டு நிற்கின்றன.

இயற்கை எனது வழிகாட்டி என்ற ஈழத் தலைவனின் சிந்தனைக்கு அமைய பொங்கல் இயற்கை குறித்த நேயத்தை முதன்மையாக வெளிப்படுத்துகின்றது.

மனித உழைப்பிற்கும் விலங்குகள் குறித்த நேயத்திற்குரிய நாளாகவும் பொங்கல் மேன்மை பெறுகிறது.

உலகமயமாதல் சூழலில் பண்பாடுகள் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இன்று தமிழ் மரபுத் திங்கள் என்று உலகம் தழுவிய ரீதியில் உலக சமூகத்தினராலும் சிறப்பான ஒரு நாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதுவே தமிழர் பண்பாட்டின் அசைக்க முடியாத இருப்பின் நீட்சியுமாகும்.

பண்பாடு என்பது உயிர்மூச்சு

பண்பாட்டை மறந்த எந்தவொரு இனமும் இந்த பூமிப் பந்தில் நிலைத்ததில்லை. பண்பாடு என்பது ஒமூ சமூகத்தின் நிலைத்த அடையாளம்.

தொடர்பாடல், உளவியல், அடையாளம், மானுடவியல், நாகரிகம் என பல்வேறு கூறுகள் நிறைந்த பண்பாடு கால மாற்றங்கின் போதும் கால வளர்ச்சிகளின் போதும் மாறாமல் நிலைத்து நிற்கின்ற தனித்துவ இயல்பை கொண்டது. அது மாத்திரமில்ல, பண்பாடு ஒரு சமூகத்தின் ஒரு இனத்தின் வாழ்வியலை முழுமைப்படுத்துகின்ற ஒரு அறிவியலாகத்தான் ஆதிகாலத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல்… | Thai Pongal Festival

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்பொங்கலே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகின்றது.

ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் நாட்கள் நகர்ந்தாலும் ஈழத்தில் தமிழ் ஆண்டுப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்கின்ற பண்பாடு காணப்படுகின்றது.

எத்தகைய போர்க் காலத்திலும் எறிகணைகள், குண்டு மழைக்கு மத்தியிலும் புதிய மண் பானை வைத்து பொங்கி சூரியனுக்கு படைத்துவிட்டு இடம்பெயர்கின்ற மக்கள் எமது மக்கள்.

இயற்கை வழிபாடு

பொங்கல் என்பது இரண்டு வித்தில் முக்கியத்தும் பெறுகின்றது. அது தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மாண்பையும் எடுத்துரைக்கின்றது.

தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள். அத்துடன் பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்ற கருணை கொண்டவர்கள்.

தைப்பொங்கலின் போது, பொங்கி சூரியனுக்கு படையல் செய்கிறோம். இந்த உலகம் சிறப்பாக நகர வேண்டும் எனில் இயற்றை சீராக இருக்க வேண்டும்.

இன்றைக்கு மனிதர்கள் இயற்கைக்கு எதிராக பல்வேறு செயல்களை செய்து, இயற்கை சீற்றங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள். பேரழிவுகள் இதனால் ஏற்படுகின்றன.

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல்… | Thai Pongal Festival

இயற்கையை தெய்வமாக வழிபட்டு, இயற்கையை பேணினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது என்ற படிப்பினையை பொங்கல் பண்டிகை உணர்த்துகிறது.

தமிழ் மக்களின் பண்பாட்டில் இயற்கையை பேணி வணங்குகின்ற செயற்பாடுகள்தான் நிறைந்திருக்கின்றன. இயற்கையை பேண வேண்டும்.

பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களும் அறிவியலும்தான் தமிழ் மக்களின் வணக்க முறைகளின் பண்பாட்டு அம்சங்கள் எனலாம். அதில் முதன்மையானது தைப்பொங்கல் ஆகும். ஈழத்தில் பொங்கல் எப்படி? என்பது தான் தமிழகத்தில் உள்ளவர்களதும் புலம்பெயர்ந்த மக்களதும் முக்கிய விசாரிப்பு.

ஈழத்தில் வீட்டுக்கு வீடு இன அழிப்பு போரின் பலவிதமாக பாதிப்புக்கள். போரில் தாய் தந்தையை இழந்த குழந்தைகள், சிறுவர் இல்லங்களிலும் தெருக்களிலுமாக உள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை தேடும் தாய்மார்கள் ஒரு புறத்தில் கண்ணீரும் கம்பலையாகவும் தெருக்களில் இருந்து போராடுகின்றனர்.

சிறைகளில் அரசியல் கைதிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் கணவர் வருவார், அப்பா வருவார் என்று காத்திருக்கும் பெண்களும் குழந்தைகளும் இன்னொரு புறத்தில் துயர வாழ்வு வாழ்கின்றனர்.

போர்க்களத்தில் புலிப் பொங்கல்

இவர்களின் வீடுகளில் பொங்கல் எப்படி இருக்கும்? இந்த மக்களின் பொங்கல் துயரப் பொங்கல்தான். இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு வாழ்வை ஈழ மக்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ மலர்வதைப் போலவே ஈழ மக்கள் தமதது பண்பாட்டு பண்டிகைகளும் அனுசரித்துச் செல்கின்றனர்.

2009இற்கு முன்னரான காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்களத்திலும் பொங்கல் செய்வார்கள். விடுதலைக்கான பொங்கலாக போராட்டம் நடந்த காலத்தில் புலிக் கோலமிட்டு, புதிய பானை வைத்து போர்க்களத்தில் பொங்கி தமிழ் பண்பாட்டை காத்தனர் விடுதலைப் புலிகள்.

இலங்கை அரசும் அதன் படைகளும் சிங்களப் பிக்குகளும் பொங்கல் நிகழ்வை தடைசெய்யும் வகையில், பல்வேறு முயற்சிகளை கடந்த காலத்தில் மேற்கொண்டமையை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல்… | Thai Pongal Festival

 

குறிப்பாக ஈழச் சைவ ஆலயங்களில் பொங்கல் பொங்கும் போது அவற்றை குழப்பிய கசப்பான சில நிகழ்வுகளும் இடம்பெற்றள்ளன.

சைவ ஆலயங்களை ஆக்கிரமிக்க முயல்கின்ற நில ஆக்கிரமிப்பாளர்கள், அந்தக் கோயிலின் வழிபாடுகள், பண்பாடுகளையும் தடுக்க முனைகின்றமை மிகப் பெரிய பண்பாட்டு உரிமை மறுப்பும் மீறலும் ஆகும்.

தீராத இன்னல்கள்

இனியாவது தமிழர்களின் வாழ்வில் இன்னல்கள் அகல வேண்டும் என்று வேண்டியபடி பொங்குவோம். ஈழ மண்மீது உண்மையான வெளிச்சம் படர வேண்டும் என்று பொங்கி சூரியனுக்கு படையல் இடுவோம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீள வீடு திரும்ப வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாய் சிறையில் வாழ்பவர்களுக்கு விடுதலை வேண்டும் என்றும் இறைஞ்சி பொங்குவோம்.

பசுக்களுக்குகூட பொங்கி, வழிபட்டு, உணவுட்டும் பண்பாட்டை கொண்ட தமிழ் இனம், இன்று சிறைகளிலும் தெருக்களிலும் வாடிக் கொண்டிருக்கின்றது. உரிமையை இழந்து, பண்பாட்டுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகின்றது.

இத்தனைக்குப் பிறகும், ஈழத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் மீண்டெழத் துடிக்கிறார்கள் என்றால், அவர்களின் இயற்கையை போற்றி, வாழ்கின்ற பண்பாட்டை கொண்டவர்கள் என்பதும் ஒரு காரணம்தான்.

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல்… | Thai Pongal Festival

தமிழர்களின் தெய்வங்களும் வணக்க முறைகளும் அதன் மனிதாபிமானம் மற்றும் கருணை என்பனவும் இந்த உலகிற்கு மேன்மையான ஒரு பண்பாடாகத்தான் சேகரமாகியுள்ளது.

புதிய காலம் பிறக்கும் என்பது உலகப் பொதுமக்களின் நம்பிக்கை. தமிழர்கள் அதை பொங்கலில் இருந்து தொடங்குகின்றனர்.

உலகிற்கு இயற்கையை வழிபடவும் விலங்குகள்மீது நேயம் கொள்ளவும் கற்றுக்கொடுத்த ஒரு இனம், தம்மீது மேற்கொள்ளப்பட்ட நேயமற்ற ஒடுக்குமுறைக்கான நீதியையையும் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு பொங்கல் காலம் வரும் என நம்புவோம்.

இன்றோ நெருக்கடிப் பொங்கல்

இன ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழ் மக்கள் இந்த மண்ணில் மீண்டெழத் துடிக்கிறார்கள் என்றால், அவர்களின் இயற்கையை போற்றி, வாழ்கின்ற பண்பாட்டை கொண்டவர்கள் என்பதும் ஒரு காரணம்தான்.

தமிழர்களின் தெய்வங்களும் வணக்க முறைகளும் அதன் மனிதாபிமானம் மற்றும் கருணை என்பனவும் இந்த உலகிற்கு மேன்மையான ஒரு பண்பாடாகத்தான் சேகரமாகியுள்ளது.

புதிய காலம் பிறக்கும் என்பது உலகப் பொதுமக்களின் நம்பிக்கை. தமிழர்கள் அதை பொங்கலில் இருந்து தொடங்குகின்றனர்.

தமிழர்களின் நேய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழர் திருநாள் பொங்கல்… | Thai Pongal Festival

உலகிற்கு இயற்கையை வழிபடவும் விலங்குகள் மீது நேயம் கொள்ளவும் கற்றுக்கொடுத்த ஒரு இனம், தம்மீது மேற்கொள்ளப்பட்ட நேயமற்ற ஒடுக்குமுறைக்கான நீதியையையும் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு பொங்கல் காலம் வரும் என நம்புவோம்.

விடுதலையை வென்றெடுக்கும் போராட்டத்தையும் இனியெமது பண்பாடு ஆக்குவோம். அழிவுகளின் மத்தியிலும் பண்பாட்டுக் கூறுகளை கைவிடாதவர்களாய் வாழ்வோம்.

எமது இனத்தின் மொழி, பண்பாடு, நிலம், உயிரினங்கள் என்று அனைத்தையும் எத்தகைய சூழலிலும் பாதுகாத்து விடுதலையை வென்றெடுப்போம். பண்பாட்டு வழியிலும் போராட வேண்டிய நிலைக்கு ஈழத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

அப்படிப் பார்க்கையில், பொங்கலைக்கூட ஒரு ஆயுதமாக பண்பாட்டு எழுச்சியாக பொங்க வேண்டும். குமுறும் எமது மனங்கள் போல எத்தனை துயரத்தின் மத்தியிலும் பொங்கல் பானையும் பொங்கட்டும்.

தீபச்செல்வன்

நன்றி – ஐபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More