செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை போரின் பின் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியா? வளர்ச்சியா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

போரின் பின் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியா? வளர்ச்சியா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

——————————————————

    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உக்ரேனிய போருக்கு முன்பும் – பின்பும் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியுற்றதா அல்லது வளர்ச்சி அடைந்ததா என அலசும் ஆக்கமாகும். ரஷ்யா எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்படுவதாக தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது)

உக்ரேன் மீதான போரினால், ரஷ்ய மீதாக மேலை நாடுகள் பொருளாதார தடைகளை கடந்த வருடம் விதித்தன. இதன் மூலம் ரஷ்யாவை தண்டிக்கவும், தனிமைப்படுத்தவும் மேற்குலகு முயன்றது. ஆயினும் ரஷ்ய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட தற்போது சிறப்பாக செயல்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

ஆயினும் அமெருக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தடைகளை தகர்த்து ரஷ்யா புதிய வணிக கூட்டணிகளை உருவாக்கி வருவதுடன் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.  

இந்த தடைகளின் விளைவு நேர்மாறாக அமைந்ததை விட இப்பொழுது மேலை நாடுகள் பணவீக்கத்துடன் போராடி பொருளாதாரம் மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

போருக்குமுன் ரஷ்யாவின் கடன்:

ஆயினும் போருக்கு முன்பாக ரஷ்யாவிற்குக்  கடன்  கொடுத்த வங்கிகள் மற்றும் நாடுகளின் நிலை என்ன பற்றிய சிறிய அறிதலே இக்கட்டுரையாகும்.

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவில் தங்களது முதலீடுகளின் மதிப்பு சரிந்து போயிருப்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்துள்ளனர். ரஷ்யாவின் நிதி நம்பகத்தன்மை குறைந்து போயிருக்கும் நேரத்தில் முதலீட்டாளர்கள் தமது பங்குகளை விற்பதன் மூலம் எதிர்வினையாற்றுவதற்கு நேரமே இல்லாமல் போய் விட்டது என்றும் கருதுகின்றனர்.

அத்துடன் ரஷ்யாவின் கடன் திருப்பும் திறனைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. தற்போது 2 ஆவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் நிலை மேலும் வீழ்ச்சியடையலாம்.

இந்த மதிப்பீட்டின் படி ரஷ்யாவில் முதலீடு செய்த அன்னிய நிதி முதலீட்டாளர்கள் தமது பணத்தை 35% முதல் 65% வரை இழக்க நேரிடும் எனவும் முதலில் எச்சரிக்கப்பட்டது.

ரஷ்யாவின் மசகு எண்ணெய் வளம்:

உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்தய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, ரஷ்யா தனது அன்னிய செலாவணி இருப்பான 630 பில்லியன் டாலரில், பெரும்பாலான பகுதியைப் பயன்படுத்த முடியாத படி இருக்கிறது.

இருப்பினும் தற்போதும் ரஷ்யா வெளிநாடுகளில் மசகு எண்ணெய், எரிவாயுவை விற்று வருகிறது. இதற்காகக் கிடைக்கும் அன்னியச் செலாவணியை அது பயன்படுத்த முடியும். ரஷ்ய அரசாங்கம் மற்றும் ரஷ்ய நிறுவனங்களான Gazprom, Lukoil மற்றும் Sberbank போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 150 பில்லியன் டாலர் வரை கடன்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை டாலர் மற்றும் யூரோ செலாவணிகளில் உள்ளது. மேலும் கடன் திருப்புதல், வட்டி செலுத்துதல் ஆகியவை மேற்கண்ட செலாவணிகளில் செய்யப்பட வேண்டும்.

ரஷ்யா கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், இதுதான் 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகக் கடன் செலுத்தா நிலையை அடையும்.

1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு கம்யூனிச அரசு பழைய ஜார் வம்ச ஆட்சியின் கடனை திருப்பிச் செலுத்த மறுத்து விட்டது. அதற்குப் பிறகு அன்னிய செலாவணி கடனை திருப்பிச் செலுத்தா நிலை இதுவாகத்தான் இருக்கும்.

உக்ரைன் போரின்பின் நிலமை:

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரை அடுத்து ரஷ்யா தனது கடனை எப்படி அடைக்கும் என்றகேள்விஎழுந்திருக்கிறது

. வாங்கியகடனைசெலுத்தமுடியாமல்ரஷ்யாமுயல்கிறதாஎன்றும்ஐயப்பட்டனர்.

அதேவேளை உலகளாவிய நாணய நிதியங்கள் ரஷ்யா கடனை திருப்புச் செலுத்தாது என்று எச்சரித்திருக்கின்றன. எவ்வாறாயினும் செலுத்த வேண்டிய வட்டியை இப்போது செலுத்தி விட்டதாகவும், அதற்கு அமெரிக்க வங்கிகளின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் ரஷ்ய நிதி அமைச்சர் முன்பு கூறியிருந்தார்.

எந்த ஒரு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ரஷ்யாவில் பெரும் பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் ஊகிக்கின்றனர். கடன்களைத் திருப்பிச்  செலுத்தாத  நிலை ரஷ்யாவில் பாரிய தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

உக்ரைன் மீதான போருக்கு முன்பு ரஷ்யா கடனை திருப்பிச் செலுத்தும் நம்பகமான நாடு என்ற நிலை இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

தடை காரணமாகப் பெருந்திரளான வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறி விட்டன.

ரூபிளின் மதிப்பு வீழ்ச்சியா ?

ரூபிளின் மதிப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே கடுமையான கடன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7% குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவில் பணவீக்கம் 2022 பிப்ரவரி மாதத்தின்படி 9.15% ஆகும். தற்போது ரஷ்ய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 9.5% இதிலிருந்து 20% ஆக உயர்த்தியிருந்தாலும் பண வீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப் போர் பாதிப்புகளில் ரஷ்யாவை விட மற்றய உலக நாடுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளே மிக அதிகம்.

ரஷ்யாகடனை ரூபிளில் செலுத்துமா?

தற்போதைக்கு ரஷ்யா உள்நாட்டில் வைத்திருக்கும் மூலதனங்களை பயன்படுத்தி கடன், வட்டியை செலுத்த

ரஷ்யா பணமான ரூபிளில் செலுத்துவது பற்றி ஆராய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் டாலர் அல்லது யூரோ செலாவணி நிறுத்தப்பட்டால் அதற்குப் பதில் ரூபிளில் கடன், வட்டியைக் கட்டுவதாகச் சர்வதேச முதலீட்டாளர்களிடம் கூறியிருக்கிறது.

ரஷ்யாவின் சில கடன் ஒப்பந்தங்கள் வேறு செலாவணிகளில் திருப்பித் தருவதை அனுமதிக்கின்றன. அந்த ஒப்பந்தங்களின் படி ரூபிளில் செலுத்தலாம். அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால் டாலர் மற்றும் யூரோவிற்கு நிகராக ரூபிளின் மதிப்பு என்ன என்பதை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ரஷ்யாவின் இன்றைய நிதி பிரச்சினையால் உலகப்  பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு எனப் பார்த்தால்,மூன்றாம் உலக நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதை காணலாம்.

1998 ஆம் ஆண்டில் ரஷ்யா கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலை நிதிச் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போதைய நெருக்கடி ஒரு குறியீடு என்றாலும் அது மேலும் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுனநர்கள் கூறுகிறார்கள்.

உக்ரேனியப் போரால் 2022 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார வளர்ச்சி 4.4% குறையுமென சர்வதேச நாணய நிதியம் கூறியிருக்கிறது. இருப்பினும் இதற்கு மேல் ரஷ்ய நெருக்கடி உலக நிதி அமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்காது என கருதப்படுகிறது.

அதே நேரம் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால் எதிர்காலத்தில் அந்நாட்டில் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு வழிவகுக்கும். கூடவே உலக உணவு மற்றும் எரிசக்தி விலைகைள உயருமென சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.

விலை உயர்ந்த மசகு எண்ணெய் :

இதே வேளை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் உண்மையான விளைவு என்னவென்றால், அவை பதிலடியாக மேற்குலகையே அதிகம் பாதித்துள்ளது. ஐரோப்பாவிற்கன எரிவாயு விநியோக

பெரிய குழாய்களில் இருந்து விநியோகத்தை 80% வரை ரஷ்ய குறைத்துள்ளது.

அத்துடன் உலகில் மசகு எண்ணெய் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன.

கிழக்கு ஐரோப்பாவின் கோதுமை மற்றும் பிற உணவுப் பொருட்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு கருங்கடல் ஊடான கடற் போக்குவரத்தும் அனைத்தும் ரஷ்யாவின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனாலேயே ரஷ்யா எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

            – ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More