புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை மரபுரிமைச் சின்னமாகப் புங்குடுதீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம்

மரபுரிமைச் சின்னமாகப் புங்குடுதீவு பெருக்கு மரம்: பேராசிரியர் புஷ்பரட்ணம்

4 minutes read

(மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் கருத்தில் கொண்டு அந்நிகழ்வு குறைந்த மக்களின் பங்களிப்புடன் இன்று (20.03.2020) நடைபெற உள்ளது. அதையொட்டியே இக்கட்டுரை வெளிவருகின்றது)

சமகாலத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்பொருபோதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களிடையே வெளிக்கிழம்பியிருப்பதைக் காணமுடிகிறது. இதைத் தொடக்கி வைத்ததில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. 2017 ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ்க் கல்விச்சேவை இணைப்பாளர் திரு. கந்தசாமி பார்த்திபனின் முயற்ச்சியால் ரூடவ்ழத் தமிழரிடையே மறைந்தைவையும்ரூபவ் மறக்கப்பட்டு வருகின்றதுமான ஏறத்தாழ 500க்கு மேற்பட்ட பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களின் புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டு அவை “ரூடவ்ழத்தமிழரின் மரபுரிமை அடையாளங்கள்” என்ற பெயரில் தனிநூலாக வெளியிடப்பட்டது.

அந்நூல் இன்று சுவீஸ் நாட்டில் மட்டுமல்ல தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளிலும் தமிழ் கற்கும் பிள்ளைகளுக்கும்ரூபவ் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தாயகத்திலும் தமது மரபுரிமைகளை அடையாளம் கண்டு பாதுகாப்பதற்கும் இந்நூலும் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவதைக் காணமுடிகின்றது.

அண்மையில் சுவிஸ் பருத்தி நகர அபிவிருத்தி சங்கத்தின் நிதி உதவியுடன் தமிழர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் தெருமூடி மடம் மீள்ளுருவாக்கம் செய்யப்பட்டு பருத்தித்துறை மக்களிடம் கையளிக்கப்பட்டது. ரூடவ்ழத் தமிழரின் மரபுரிமைச் சின்னங்களுள் மடம்ரூபவ் கேணிரூபவ் சுமைதாங்கிரூபவ் ஆவுரஞ்கிக்கல் என்பவற்றிற்கு தொன்மையானரூபவ் தொடர்ச்சியான வரலாறு உண்டு. இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் வணிகத்தின் பொருட்டு அநுராதபுரத்தில் அமைத்த மடம் பற்றி அங்குள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. அதற்கு தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதற்கு தெருமூடி மடமும் சான்றாகும்.

தெருமூடி மடத்தை தொடர்ந்து தற்போது சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முழுமையான நிதி உதவியுடன் புங்குடுதீவில் உள்ள பெருக்கு மரம் அப்பிரதேசத்தின் மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளமை பெருமை தரும் செய்தியாகும். தீவகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்பெருக்கு மரத்தையும் பார்வையிட்டு வருவதால் அவர்களின் வசதி கருதி பெருக்கு மரத்தின் சுற்றாடலையும்ரூபவ் அதையொட்டிய கடற்பரப்பையும் அழகுபடுத்தி அங்கு மலசலகூட சதியையும்ரூபவ் சிறுவர் விiயாட்டு அரங்கையும் அமைத்திருப்பதன் மூலம் இவ்விடத்தையும் சுற்றுலா மையமாக மாற்றியுள்ளனர். எதிர்காலத்தில் இவ்விடத்தில் தமிழர்களின் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தக் கூடிய அருங்காட்சியகம் ஒன்றையும் அமைப்பதற்கும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தீர்மானித்திருப்பது தமிழ் மக்களுக்கு மேலும் மகிழ்ச்சிதரும் செய்தியாகும். இதன் மூலம் புங்குடுதீவுக்கு மேலும் ஓர் புதிய முகவரி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது புங்குடுதீவில் பாதுகாக்கப்பட்டுள்ள பெருக்கு மரம் அடன்சோனியா எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். இது ஐந்து முதல் முப்பது மீற்றர் உயரத்திற்கு வளரக்கூடியவை. ஏழு முதல் பதினொரு மீற்றர் விட்டம் கொண்டவை. தமது உடற் பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைத்து கடுமையான வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டது. மடகஸ்கார் போன்ற நாடுகளில் இம்மரத்தின் இலைகளும் ரூபவ் காய்களும் உணவுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வகை மரங்கள் மடகஸ்கார்ரூபவ் ஆபிரிக்காரூபவ் அரேபியாரூபவ் ஆஸ்திரேலியா போன்ற  நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள்ரூபவ் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர் ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவுரூபவ் மன்னார்ரூபவ் காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும்ரூபவ் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும்.

இதனால் புங்குடுதீவில் பெருக்கு மரங்கள் நாட்டப்பட்டமைக்கு அப்பிரதேசத்தின் அமைவிடமும்ரூபவ் அதன் வரலாற்றுப் பழமையுமே முக்கிய காரணம் எனலாம். ஏனெனில் தீவகமே வரலாற்றுக்கு முற்பட்டகாலத்தில் இருந்து இலங்கை தமிழக உறவின் தொடக்க வாயிலாகவும்ரூபவ் முதற்படியாகவும் ரூபவ்இருந்துள்ளது. தமிழகத்தில் காலத்திற்கு காலம் தோன்றி வளர்ந்த பண்பாடு முதலில் தீவகத்திற்குப் பரவி அங்கிருந்தே வடஇலங்கைக்கும்ரூபவ் இலங்கையின் ஏனைய இடங்களுக்கும் பரவியதாக வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். யாழ்ப்பாணத்தின் பூர்வீக மக்கள் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் பொ.இரகுபதி தீவகத்தின் தொன்மையான குடியிருப்பு மையங்களாக காரைநகர்ரூபவ் வேலணைரூபவ் புங்குடுதீவு முதலான இடங்களைக் குறிப்பிடுகின்றார். மகாவம்சத்தில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புங்கிடுதீவு “பியங்குதீப(ம்)” எனக் குறிப்பிடுகின்றது. இதில் இருந்து புங்குடுதீவின் வரலாற்றுத் தொன்மை தெரிய வருகின்றது. கிறிஸ்தவ சகாப்தத்தில் இருந்து தமிழ் நாடுரூபவ் இந்தியாரூபவ் உரோம்;ரூபவ் அரேபியாரூபவ் சீன முதலான நாடுகளின் வணிகத் தொடர்புகள் புங்குடுதீவு உட்பட தீவகத்தின் கரையோரங்களில் ஏற்பட்டிருந்ததற்கு நம்பகரமான ஆதாரங்கள் உள்ளன. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நம்பொத்த என்ற சிங்கள இலக்கியம் வடஇலங்கையை தமிழ் பட்டினம் (தமிடபட்டின) எனக் குறிப்பட்டு அங்குள்ள முக்கிய வரலாற்று இடங்களைக் குறிப்பிடுகின்றது.

அவற்றுள் கணிசமான இடங்கள் தீவகத்தை குறிப்பதாக உள்ளது. அமரர் பேராசிரியர் வி.சிவசாமி அவர்கள் தனது இளமைக் காலத்தில் தற்போது புங்குடுதீவில் பாதுகாக்கப்பட்ட பெருக்கு மரத்திற்கு அருகில் மேலும் பல பெருக்கு மரங்கள் இருந்ததாகவும்ரூபவ் அவற்றிற்கு அருகில் போத்துக்கேயர் அல்லது ஒல்லாந்தர்கால வெளிச்ச வீட்டின் அழிபாடுகளும்ரூபவ் மற்றும் நெடுந்தீவை ஒத்த கல் வேலிகளும் இருந்ததாக என்னிடம் கூறியுள்ளார். இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது தற்போது பெருக்கு மரம் காணப்படும்புங்குடுதீவுப் பிராந்தியம் முன்பொரு காலத்தில் மன்னார்ரூபவ் காலி போன்ற கடல்சார் தொடர்பின் வணிக நகரமாகவும்ரூபவ் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் எனக் கூறலாம். ஆயினும் தற்போது அதை அடையாளப்படுத்தி காட்டும் ஒரேயொரு நினைவுச் சின்னமாக பெருக்கு மரத்தையே பார்க்கின்றேன். சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தமது கிராமத்தின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதையே முக்கிய இலட்ச்சியமாகக் கொண்டு செயல்படுவதால் எதிர்காலத்தில் யாழ்ப்பாண தொல்லியல் திணைக்கழக உதவியுடம் பெருக்குமரம் அமைந்துள்ள கூற்றாடலில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டால் இவ்விடத்தில் அமையவிருக்கும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்குரிய வரலாற்றுப் பெறுமதியுடைய மரபுரிமைச் சின்னங்கள் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

பேராசிரியர் ப. புஸ்பரட்ணம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More