எதிர்வரும் மாதங்களில் ரஷ்ய இராணுவத்தில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பெரும் பணச் சலுகையுடன் நாடு முழுவதும் இருந்து படைகளை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே புட்டினின் ஆணை வந்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது தொடக்கம் 70 முதல் 80,000 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாக மேற்கத்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கைதிகளின் வீடுதலை மற்றும் பணச் சலுகைகளுடன் சிறைச்சாலைகளிலும் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறுகிய கால போர் நடவடிக்கை ஒன்றாகவே உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோதும், உக்ரைனின் கடுமையான எதிர்ப்பால் ரஷ்யாவின் முன்னேற்றம் ஸ்தம்பித்ததோடு அண்மைய வாரங்களில் நகர்வது கடினமாகி உள்ளது.