வாழ்க்கையில் எதுவும் நிச்சயமற்றது என்பதற்கு ஆதாரமாக அமைந்தது துருக்கி – சிரிய எல்லையில் இடம்பெற்ற பூகம்பம் ஆகும். கண் இமைக்கு நொடியில் உலக நாடுகளின் சரித்திரத்தில் இடம்பிடித்த இந்த சோக சம்பவம் ,மரண ஓலம் ,உறவுகளின் தவிப்பு என்று அனைத்து இருளான சரிதமென்ற அவச்சொற்களை வரிசை படுத்தி கூறலாம்.
நம்மை சூழ உள்ள இயற்கை எப்போது எப்படி நமக்கு எதிராக மாறும் என்பது இயற்கையில் ஒப்பிடுகையில் அற்ப ஜீவராசிகளான மனிதர்கள் ஒரு நாளும் அறிய போவதில்லை. அப்படி ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் ஒன்றுதான் இந்த பூகம்பம் மரங்கள் எப்படி காற்றின் வேகத்தில் அசைந்து சரிந்து விழுமோ அப்படி தான் பூகம்பத்தில் சிக்கிய கட்டிடங்கள் சரிந்து கீழே கொட்டியது.
கடந்த 5/2/2023 அதிகாலை 4.17 மணியளவில் துருக்கி- சிரிய எல்லையில் 179 km ஆழத்தில் முதல் நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் சிரியாவின் காசியாண்டெப் என்ற பகுதியிலிலும் இரண்டாவது நிலநடுக்கம் துருக்கியின் ஹராமனமராஷ் மாகாணம் எல்பிஷ்டனில் 7.5 ரிக்டர் எனவும் பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்துக்கு முன் பறவைகளின் மூலம் நடக்கவிருக்கும் ஆபத்தை இயற்கை உணர்த்தியிருந்தததை தற்போது காணொளி பதிவுகள் மூலம் அனைவருக்கும் சமூக வலை தளங்களில் காட்சிப்படுத்தி இருந்தனர்.எனினும் இதன் தாற்பரியத்தை பறவைகள் உணர்ந்த அளவு மனிதர்கள் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மீண்டும் தொடர்ச்சியாக 6.0 ரிக்டர் அளவு மூன்றாவது நில நடுக்கம் பதிவாகியது தொடர்ந்தும் பீதியிலிருந்த மக்களுக்கு 7/2/2023 ஆம் திகதி 5.5 ரிக்டர் அளவும் ,5.9 ரிக்டர் அளவும் பதிவானது.இந்த நிலநடுக்கம் துருக்கி ,சிரிய எல்லைகளில் ஏற்பட்டது எனவே துருக்கியில் 5894 பேரின் மரணத்தை பதிவு செய்ததுடன் 1832 சிரியாவிலும் பதிவாகியுள்ளது மொத்தமாக 7726 மரணங்களும் மொத்தமாக 42 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
100 ஆண்டுகளில் இல்லாத நிலநடுக்கம் இதுவாக பதிவாகியுள்ளது. தோண்ட தோண்ட குறையாத சடலங்களும் மரண ஓலங்களும் குறையாத நிலையில் மேலும் சில பகுதிகளில் பனிபொழிவால் மீட்பு பணிகள் காலம் தாழ்த்தியுள்ளதுடன்
முக்கியமான சிரியாவின் அப்பரின் நகரின் நிலநடுக்கத்தில் வைத்தியசாலை ஒன்று சிக்கி அங்கெ பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படா நிலையில் குழந்தை மீட்கப்பட்டமை பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.