தென் அமெரிக்க நாடானா கொலம்பியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பெண் அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குயிப்டோ என்ற பகுதியில் இராணுவ தளவாடங்களை விநியோகம் செய்யும் பணியில் குறித்த இராணுவ ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்தது.
அதில் பெண் அதிகாரி உடபட 4 இராணுவ அதிகாரிகள் பயணித்துள்ளர். அதன்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், கீழே விழுந்து நொறுங்கியது.
அதில் பயணித்த நால்வரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.