2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்மையில் வெளியிட்டுள்ளது.
எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையானது ஒரு குறிப்பிட்ட நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், pre – departure விசா விண்ணப்பம் இல்லாமல், எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்பதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது.
முதலிடத்தில் சிங்கப்பூர்
அதனடிப்படையில், இந்த வருடத்தின் இந்த தரவரிசையில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்தி : மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டு வெளியீடு
இங்கிலாந்தின் நிலை
இதேவேளை, இங்கிலாந்து கடவுச்சீட்டு 4ஆவது இடத்தையும், அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளதுடன், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 80ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கையில் நிலை
மேலும், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.