நியூசிலந்தில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர் ஒருவர் உதவிக்காக சுமார் 24 மணி நேரம் காத்திருந்துள்ளார்.
North Island தீவின் கிழக்குக் கரைக்கு அருகே அவர் தனியாக மீன் பிடிக்கச் சென்றார்.
அப்போது ஒரு மீனை படகிற்குள் இழுத்தபோது மீனவர் கடலுக்குள் தவறி விழுந்தார்.
அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட மீனவரால் படகிற்குத் திரும்பமுடியவில்லை.
குளிர் நிறைந்த கடலில் இரவைக் கழிக்க நேர்ந்தது. நீந்திக் கரையேற உடம்பில் தெம்பு இல்லை.
மறுநாள் கரை திரும்ப வழி தேடினார் மீனவர்.
கைக்கடிகாரத்தில் படும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்து, அருகிலுள்ள மீனவர்களின் கவனத்தை ஈர்க்க முனைந்தார்.
இதனையடுத்து மீனவர்கள் மூவர் அவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினர்.
மூலம் : AFP