ஹாங்காங்கிலிருந்து சீனாவின் Shenzhen நகருக்கு 104 பாம்புகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யப்பட்டார்.
அவர் பாம்புகளைக் காற்சட்டைக்குள் பைகளில் வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
குறித்த நபரை, சுங்க அதிகாரிகள் சோதித்தபோது அவருடைய காற்சட்டையில் 6 பைகள் இருப்பதைக் கண்டனர். ஒவ்வொரு பையும் தனித்தனியாக ஒட்டப்பட்டிருந்தன. அப்பைகளில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை என்று பல நிற 104 பாம்புகள் இருந்தன.
விலங்குகளைக் கடத்துவதில் உலகிலேயே முதலிடத்தில் சீனா உள்ளது. இது தொடர்பில் அண்மையில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாம்புகளோடு சிக்கியவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.