ஐந்து வயது சிறுவனை கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Lincoln Button என்ற சிறுவன் டிசெம்பர் 15ஆம் திகதி எசெக்ஸின் சவுத் ஒகெண்டனில் உள்ள விண்ட்ஸ்டார் டிரைவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அத்துடன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
35 வயதான Claire Button என்பவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, சவுத்ஹெண்டில் உள்ள நீதிமன்றில் ஆஜராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.