தமது விமானத்தின் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்டதாக JetBlue விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 06ஆம் திகதி குறித்த விமானம் நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்றுள்ளதுடன், விமானம் தரையிறங்கிய பிறகு நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சடலங்களின் அடையாளங்கள் தெரியாத நிலையில், அவர்கள் இருவரும் எப்படி தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியினுள் நுழைந்தனர் என்பது தெரியவரவில்லை.
குறித்த இருவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.