அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்கா பயணிக்க தயாராகி வருகின்றனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கும் பொருட்டே ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்கா பயணிக்க தயாராகி வருகின்றனர்.
அதன்படி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அமெரிக்கா பயணிக்கவுள்ளார்.
அத்துடன், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் ஆகியோரும் வாஷிங்டன் பயணிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்வு முடிந்ததும் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகும் செனட்டர் மார்கோ ரூபியோ மற்றும் ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகின்றார்.