மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது.
அடுத்த மாதம் 10ஆம் திகதிக்குள் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ‘மெட்டா’, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இந் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து 72 ஆயிரம் பேர் மெட்டா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.