செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மீண்டும் தவறி விழுந்து காயமடைந்துள்ள போப் பிரான்சிஸ்!

மீண்டும் தவறி விழுந்து காயமடைந்துள்ள போப் பிரான்சிஸ்!

0 minutes read

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், நேற்று (16) வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் கட்டுப் போடப்பட்டு இருப்பதாகவும் வத்திக்கான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

போப் பிரான்சிஸ் (வயது 88), முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை அவர் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் காயம் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களில் 2ஆவது முறையாகவும் போப் ஆண்டவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More