உலகில் புகைபிடிக்காத 53 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையானோர்க்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு புகைப்பிடிக்கும் பழக்கம் அற்றவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு காற்றுத் தூய்மைக்கேடு முக்கிய காரணமாய் இருப்பதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்காசியாவில் இருப்பவர்களும் பெண்களும் இவ்வாறு அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
2022இல் 2.5 மில்லியன் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக Lancet நுரையீரல் மருத்துவச் சஞ்சிகை குறிப்பிட்டது.
அதில் மிக அதிகமானோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேராக அதிகரித்துள்ளது.
adenocarcinoma எனும் அந்த வகை நுரையீரல் புற்றுநோய், 185 நாடுகளின் பெண்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.