போப் பிரான்சிஸின் இறுதி ஆராதனையில் சுமார் 4 இலட்சம் பேர் பங்கேற்றதாக வத்திகான் தெரிவித்தது.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இறுதி ஆராதனையில் ஐம்பதுக்கும் அதிகமான உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலும் ரோம் நகரத் தெருக்களிலும் 400,000 பேர் திரண்டதாக வத்திகன் தெரிவித்தது.
1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராகப் பொறுப்பேற்ற லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் இவர்.
88 வயதுடைய போப் இம்மாதம் 21ஆம் திகதியன்று காலமானார்.
அர்ஜெண்டினாவில் பிறந்த போப், தமது இறுதிச்சடங்கு பெரிய அலங்காரங்கள் இல்லாமல் எளிய முறையில் நடைபெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
எளிய மக்களின் நலனை நாடியவர், திறந்த இதயத்தோடு சேவையாற்றியவர் என்று அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் ‘ஃபிரான்சிஸ்கஸ்’ என்ற வார்த்தை மட்டுமே உள்ளது என்றும், அது அவரது பெயரின் லத்தீன் வடிவமாகும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.