இலண்டன் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சைக்கிள் ஓட்டுதல் 50%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
2024 ஒக்டோபர் இல் 30 இடங்களில் ஒரு நாளைக்கு 139,000 பேர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.
இது 2022 இல் 89,000 பேர் ஆக காணப்பட்டது.
உச்ச பயண நேரத்தில் உள்ள மொத்த போக்குவரத்தில் சைக்கிள் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை 56% ஆக உள்ளது.
போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், திட்டமிட்டதை விட ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக மூன்று முக்கிய இலக்குகளை எட்டியுள்ளது.
2017 முதல் சைக்கிள் ஓட்டுதல் 70% அதிகரித்துள்ளது – 2030 இல் இலக்கு 50% ஆக இருந்தது.
அதே காலக்கட்டத்தில் மோட்டார் போக்குவரத்து 34% குறைந்துள்ளது – 2030 இல் இலக்கு 25% ஆக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.