ஜெர்மனி நாட்டின் பிரதமர் தேர்தலில் ஃபிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடந்த இரகசிய வாக்கெடுப்பில் முதல் முறை தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக நடந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த பெப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது.
சோஷியல் ஜனநாயகக் கட்சி படுதோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் முதல் வாக்கெடுப்பில் அவருக்கு 310 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
2ஆவது சுற்று வாக்கெடுப்பில் அவர், 325 வாக்குகளைப் பெற்று பிரதமராகத் தெரிவாகியுள்ளார். போருக்குப் பிந்திய ஜெர்மனியில் அவ்வாறு நிகழ்வது இது முதன்முறை.
இதையடுத்து உடனே பிரதமராக ஃபிரெட்ரிக் மெர்ஸ் பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மெய்சர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிரெட்ரிக் மெர்ஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.