இங்கிலாந்தில் மோட்டார் பந்தய வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ஓவன் ஜென்னர் (21 வயது ) மற்றும் ஷேன் ரிச்சர்ட்சன் (29 வயது) ஆகியோரே உயிரிழந்தனர்.
British Supersport மோட்டார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே இவர்கள் உயிரிழந்தனர்.
அத்துடன், ஒருவர் கடுமையாகக் காயமுற்றதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர். காயமடைந்தவர் டோம் டன்ஸ்டால் (வயது 47) என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் காயமுற்ற மேலும் ஐவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பந்தயத்தின் முதல் சுற்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குப் பிறகு பந்தயம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்னர் முழுவதுமாக இரத்துச் செய்யப்பட்டது.