மியன்மாரில் செயற்படும் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள், நேற்று (07) காலை நாடு திரும்பியுள்ளனர்.
அவர்க்ள, தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 15 இலங்கையர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை (06) மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் கடந்த மார்ச் 18 ஆம் திகதியும், 27 பேர் கடந்த வருடம் டிசெம்பர் 17 திகதியும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.