உலகளவில் குறுகிய மாதங்களுக்குள் அதிகமான நிலநடுக்கம் பல நாடுகளிலும் பதிவாகி வருகிறது.சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அக்சு என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 50 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஜின்ஜியாங் தலைநகர் உரும்கியில் நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின்விளக்குகள் அசைந்தன.ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்து, அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கத்தால் பாலங்கள், சுரங்கப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களில் சேதம் ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.