இலண்டன் ரயிலில் இருந்து வந்த பெண்ணை அலைபேசி திருடன், இழுத்து தரையில் அடித்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரமான கொள்ளை முயற்சியின் போது ஒரு பெண் ரயிலில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஒரு ஆணின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஏப்ரல் 19 சனிக்கிழமை இரவு சுமார் 10.50 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்டு நிலையத்திலிருந்து கிரேட்டர் ஆங்கிலியா ரயிலில் குறித்த பெண் பயணித்தபோது, ஒரு நபர் அவரது அலைபேசியைப் பறிக்க முயன்றார்.
அதனை அந்தப் பெண் எதிர்த்த நிலையில், வால்தம் கிராஸ் நிலையத்தில் உள்ள நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டு தரையில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாதர்.
சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகள், சிசிடிவி படத்தில் உள்ள நபரிடம், விசாரணைகளுக்கு உதவக்கூடிய தகவல்கள் இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
அவரை அடையாளம் காணும் பொதுமக்கள், ஏப்ரல் 19 இன் 867 என்ற குறிப்பை மேற்கோள் காட்டி போக்குவரத்து பொலிஸாரை, 61016 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ அல்லது 0800 40 50 40 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 0800 555 111 என்ற எண்ணில் பெயர் குறிப்பிடாமல் தகவல்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.